ஐரோப்பா

நேட்டோ நாடுகளை கடுமையாக எச்சரித்த ட்ரம்ப்!

ரஷ்யா – உக்ரைன் போரை அமைதி வழிக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்த நடவடிக்கைள் தோல்வி கண்டுள்ளன.

இந்நிலையில் ட்ரம்ப் நேட்டோ நாடுகளுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்காக நேட்டோ நட்பு நாடுகளைக் கண்டித்துள்ளார்.

நேட்டோ நட்பு நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை நிறுத்தும்போது அந்நாட்டின் மீது பாரிய பொருளாதார தடைகளை விதிக்க தான் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் ரஷ்யாவை வெற்றி பெறுவதற்கான நேட்டோவின் உறுதிப்பாடு 100% க்கும் மிகக் குறைவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இது ஒருபோதும் தொடங்கியிருக்காது எனக் கூறிய அவர், இது பைடனின் மற்றும் ஜெலென்ஸ்கியின் போர். அதைத் தடுக்கவும், ஆயிரக்கணக்கான ரஷ்ய மற்றும் உக்ரேனிய உயிர்களைக் காப்பாற்றவும் நான் இங்கு இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்