தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் டிரம்ப் – பொருளாதார நிபுணர் விடுத்த எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறார் என பிரபல பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான ஸ்டீவ் வான்கே தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளுடன் வர்த்தக போர்களைத் தொடங்கியதன் மூலம், அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்
டிரம்ப், உலகில் 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு புதிய வரிகளை விதித்துள்ள நிலையில், இந்தியாவை நோக்கி மட்டும் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இது, உலகின் பொருளாதார நிலைத்தன்மைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன.
இந்த சூழலில், டிரம்பின் வரி போக்கை எதிர்த்து அமெரிக்காவே உள்ள முக்கிய பொருளாதார வல்லுநர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர்களில் ஒருவரான வான்கே, “டிரம்பின் அறிவிப்புகள் முற்றிலும் தவறானவை. தன்னைத் தானே அழித்துக்கொண்டு எதிரியுடன் ஒருபோதும் மோதக்கூடாது என்பதே மாவீரன் நெப்போலியனின் அறிவுரை. அதை டிரம்ப் பின்பற்றவில்லை” என கூறியுள்ளார்.
மேலும், “இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இருவரும் காத்திருக்கவேண்டும். ஏனெனில் டிரம்பின் நடவடிக்கைகள் நீண்டநேரம் நிலைத்திருக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த வரி விதிப்பு முற்றிலும் முட்டாள்தனமானது” என வான்கே தனது கடுமையான விமர்சனத்தில் தெரிவித்துள்ளார்.