உலகம்

இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் மேற்கொள்ள தயாராகும் டிரம்ப்

இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் மேற்கொள்ள தயாராகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உலக நாடுகள் ஆர்வம் காட்டுகிறதா? என்று கேட்கிறார்கள். நேற்று தான் சீனாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. சிறப்பான ஒப்பந்தங்கள் எங்களிடம் உள்ளன.

விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளோம். தற்போது சீனாவில் இருந்து ஒப்பந்தத்தை தொடங்கியுள்ளோம்.

நாங்கள் அனைத்து நாடுகளிடமும் ஒப்பந்தம் செய்ய மாட்டோம். சிலருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்புவோம். நீங்கள் 25, 35, 45 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

ஒப்பந்தம் செய்வதற்கான எளிய வழி அதுதான். ஆனால், அமெரிக்க மக்கள் அதனை விரும்பவில்லை. அவர்கள் அதில் சிலவற்றை செய்ய விரும்புகிறார்கள். நான் செய்வதை விட அதிகமான ஒப்பந்தங்களைச் செய்ய விரும்புகிறார்கள்.

முன்பு எப்போதும் நடக்க முடியாத விஷயங்கள் இப்போது நடக்கின்றன. ஒவ்வொரு நாடுகளுடனும் அமெரிக்காவுக்கு சிறந்த உறவுகள் உள்ளன, இவ்வாறு அவர் கூறினார்.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்