இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

டிரம்பின் குடியேற்ற கொள்கைகளால் காத்திருக்கும் ஆபத்து – நிபுணர்கள் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய குடியேற்றக் கொள்கைகள், நாடுகடத்தல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது விலைகளை உயர்த்தும் வாய்ப்பு உள்ளது என மூடீஸ் தலைமை பொருளாதார நிபுணர் மார்க் சாண்டி எச்சரிக்கிறார்.

ஒரு நாளைக்கு 750 குடியேறிகளை நாடுகடத்தும் திட்டம், தொழிலாளர் பற்றாக்குறையை ஏற்படுத்தி, கட்டணங்கள் மற்றும் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்றும் சாண்டி கூறுகிறார்.

இது 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் பணவீக்கம் 2.5 சதவீதத்திலிருந்து 4 சதவீம் வரை உயரலாம் என்பதற்கான அபாயத்தை ஏற்படுத்துகிறது.

தொழிலாளர் சுருக்கம் காரணமாக உற்பத்தி, விவசாயம், விருந்தோம்பல், சில்லறை விற்பனை உள்ளிட்ட துறைகளில் செலவுகள் உயர்ந்துள்ளதாகவும், புதிய மற்றும் உலர்ந்த காய்கறிகள் உள்ளிட்ட சில பொருட்களின் விலை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என்றும் சாண்டி சுட்டிக்காட்டுகிறார்.

வெள்ளை மாளிகை இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, இது உள்நாட்டு பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் நடவடிக்கையிலான ஒரு பகுதி என விளக்கியது.

இதேவேளை, சில பொருளாதார நிபுணர்கள், இது போன்ற கொள்கைகள் பணவீக்கத்தை ஓரளவுக்கு மட்டும் பாதிக்கக்கூடும் என்றும், உண்மையான காரணம் வணிக நம்பிக்கை குறைதலும் நுகர்வோர் தேவை சுருக்கமும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

கட்டுப்படுத்தப்பட்ட குடியேற்றம் தொழிலாளர் செலவுகளை உயர்த்தி, தொடர்ந்து விலைகளைக் கூட்டும்” என சாண்டி எச்சரிக்கிறார். அதன் விளைவாக, பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை குறைக்கத் தயங்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி