உக்ரைன் போர் தொடர்பில் ஐரோப்பிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரவு பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் பிரித்தானியாவின் தலைவர்களை சந்தித்து உக்ரைன் போர் தொடர்பில் விவாதித்துள்ளார்.
தலைவர்களுடன் “மிகவும் வலுவான வார்த்தைகளை” பரிமாறிக்கொண்டதாகவும், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு அமைதித் திட்டத்தில் தனது நாட்டின் நிலைப்பாடு குறித்து “யதார்த்தமாக இருக்க வேண்டும்” என்றும் ட்ரம்ப் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும் மோதலை நிறுத்த அமெரிக்கா முன்வைத்துள்ள பரிந்துரைகள் உக்ரைனுக்கு பாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
உக்ரைன் தங்களுடைய நிலத்தை விட்டுகொடுத்துவிட்டு போரை முடிவுக்கு கொண்டுவர முடியாது என உறுதியாக கூறுகிறது.
இவ்வாறான ஒரு கடினமான சூழ்நிலையில் இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.





