பாலஸ்தீன மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் சர்சை கருத்துக்களை வெளியிட்டுள்ள ட்ரம்ப்!
காசாவின் முழு பாலஸ்தீன மக்களையும் மத்திய கிழக்கின் பிற பகுதிகளில் மீள்குடியேற்றலாம் என்று முன்மொழிந்த பிறகு, டொனால்ட் டிரம்ப் “இன சுத்திகரிப்புக்கு அழைப்பு விடுத்ததாக” குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க காங்கிரஸின் ஒரே பாலஸ்தீன-அமெரிக்க உறுப்பினரான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ரஷிதா த்லைப் ஜனாதிபதி இனப்படுகொலை போர்க்குற்றவாளியின் அருகில் அமர்ந்து இன சுத்திகரிப்புக்கு வெளிப்படையாக அழைப்பு விடுக்கிறார் என விமர்சித்துள்ளார்.
காசாவின் மக்களை கட்டாயமாக இடம்பெயர்ப்பது சர்வதேச சட்டத்தை மீறுவதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் மட்டுமல்ல, அமெரிக்காவின் மேற்கத்திய நட்பு நாடுகளாலும் இது கடுமையாக எதிர்க்கப்படும்.
மீள்குடியேற்ற செயல்முறையை எவ்வாறு செயல்படுத்த முடியும் என்பது குறித்து டிரம்ப் எந்த குறிப்பிட்ட விளக்கத்தையும் வழங்கத் தவறிவிட்டார் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.