அடுத்த போப் ஆண்டவராக தன்னை தானே தெரிவு செய்துக் கொண்ட டிரம்ப்

அடுத்த போப் ஆண்டவர் நான் தான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரோமில் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார்.
புதிய போப் தேர்வு குறித்து நகைச்சுவையாகப் பேசிய டிரம்ப் கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த அவரது கருத்து கேட்கப்பட்டதற்கு டிரம்ப், “நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன்; அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும்” என்றார்.
மேலும் போப் பிரான்சிஸுக்குப் பதிலாக யார் இருக்க வேண்டும் என்று கேட்டபோது, பதில் அளித்த டிரம்ப், நியூயார்க் வெளியே இருக்கும் ஒரு கார்டினல் எங்களிடம் இருக்கிறார், அவர் மிகவும் நல்லவர், எனவே என்ன நடக்கிறது என்று பார்ப்போம் இவ்வாறு அவர் கூறினார்.
(Visited 7 times, 7 visits today)