அடிமைத்தனத்தின் கதைகளை வெளிப்படுத்தும் அருங்காட்சியகங்கள் – கடும் கோபத்தில் டிரம்ப்

அமெரிக்க அருங்காட்சியகங்கள் அடிமைத்தனத்தின் கதை மட்டும் முக்கியப்படுத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் கீழ் செயல்படும் 17 அருங்காட்சியகங்களில், அமெரிக்காவின் இழிவான வரலாற்று பகுதிகள் மட்டும் முன்னிலைப்படுத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டங்களைத் தோற்கடிக்கும் வகையிலும், வெற்றிகளைக் கடந்து அமெரிக்காவின் சாதனைகள் கவனிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கறுப்பினத்தவர் வரலாற்றைச் சிறப்பிக்கும் எட்டு அருங்காட்சியகங்களில் உள்ள சில பிரிவுகள் மாற்றப்படலாம் என்ற வெள்ளை மாளிகையின் உள் அறிக்கை தொடர்பாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
இதன் மூலம், அமெரிக்காவின் வெற்றிகளை முன்னிலைப்படுத்தும் கண்காட்சிகளை உருவாக்கும் நோக்கமுள்ளதா என்பது சமூக வட்டாரங்களில் விவாதிக்கப்படுகிறது.