காசாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஹமாஸ் முயற்சி – கடும் கோபத்தில் ட்ரம்ப்
காசாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஹமாஸ் முயற்சிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தள்ளார்.
காசாவின் 45 சதவீத பகுதிகளில் இருந்து இஸ்ரேல் இராணுவம் பின்வாங்கியுள்ளது.
இந்த நிலையில், அந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நடவடிக்கைக்களை ஹமாஸ் அமைப்பினர் முடுக்கிவிட்டுள்ளனர்.
போரின்போது இஸ்ரேல் ராணுவத்துக்கு உதவியதாக 8 பேரை, பொதுவெளியில், கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் ஹமாஸ் அமைப்பினர் சுட்டுக்கொன்றனர்.
காசாவின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் ஆயுதக் குழுவினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் சண்டை நடந்துவருகிறது.
இந்தநிலையில் வொஷிங்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை துறக்காவிட்டால் இராணுவ நடவடிக்கை மூலம் ஆயுதங்களை துறக்க வைப்போம் என ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.





