வாரத்திற்கு 5000 பேரை கொல்லும் இரத்தக்களரி போரை நிறுத்துமாறு ட்ரம்ப் அழைப்பு!

துருக்கியின் இஸ்தான்புல்லில் கடந்த வாரம் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, உக்ரைன் மீதான மாஸ்கோவின் 3 ஆண்டுகால படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியை வெள்ளை மாளிகை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாரத்திற்கு சராசரியாக 5,000 க்கும் மேற்பட்ட ரஷ்ய மற்றும் உக்ரேனிய வீரர்களைக் கொல்லும் ‘இரத்தக்களரியை’ நிறுத்துவதற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்தான்புல்லில் அமைதிப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் குறித்த டிரம்பின் நம்பிக்கைகள் தகர்க்கப்பட்ட பின்னர், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பு இருந்தபோதிலும் புடின் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்.
புடினும் கலந்து கொள்ள மாட்டார் என்பது தெளிவாகத் தெரிந்ததும், டிரம்ப் அமைதி முயற்சி குறித்து செய்தியாளர்களிடம், “புடினும் நானும் ஒன்று சேரும் வரை எதுவும் நடக்கப்போவதில்லை, என்று கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.