இரண்டாவது பெரிய இராஜதந்திர பயணமாக சவுதி அரேபியா வந்துள்ள ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் முதல் பெரிய இராஜதந்திர பயணமாக சவுதி அரேபியா வந்தடைந்தார்.
அமெரிக்க அதிபரை சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வரவேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி, இந்த விஜயத்தின் போது அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க புதிய முதலீடுகளைப் பெற நம்புவதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ உட்பட பல உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர் என்று வெளிநாட்டு ஊடகச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
(Visited 4 times, 4 visits today)