வட அமெரிக்கா

நீண்டகால வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் ரிச்சர்ட் கிரெனலை சிறப்பு தூதுவராக நியமித்த ட்ரம்ப்

அடுத்த அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப் தமது நிர்வாகத்தில் யார் யாருக்கு என்ன பொறுப்பு என்பதை கட்டங்கட்டமாக அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு டிரம்ப், ரிச்சர்ட் கிரெனெலை சிறப்பு தூதராக அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் கிரெனெல், டிரம்ப்பின் உளவுத்துறை தலைவராக செயல்பட்டவர். சிறப்பு தூதர் பொறுப்பு உள்துறை மற்றும் வெளியுறவு கொள்கைகளுக்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அதனால் கிரெனெல், வடகொரியா உள்ளிட்ட அமெரிக்காவுக்கு பிரச்சினை தரும் விவகாரங்களை கையாள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் நிர்வாகத்தில் கிரெனலுக்கு வெளியுறவு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் டிரம்ப் மார்க்கோ ருபியோவை தேர்வு செய்தார்.

இந்நிலையில், கிரெனெல் உக்ரேன் போருக்கான சிறப்பு குழுவை வழிநடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

டிரம்ப் அடுத்த மாதம் அதிபராக பொறுப்பேற்கவுள்ளார். அதிபரான பிறகு அவர் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு கிரெனலின் பங்கு முக்கியமாக இருக்கும்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!