மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அறிவித்தார் ட்ரம்ப்!

மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரி விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (12.07) அறிவித்தார்.
முக்கிய வர்த்தக கூட்டாளிகளுடன் பல வாரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்விடையந்த பின்னர் இந்த வரி விதிப்பை அவர் அறிவித்துள்ளார்.
ட்ரூத் சோஷியலில் வெளியிடப்பட்ட தனித்தனி கடிதங்களில் புதிய வரிகள் அறிவிக்கப்பட்டன.
இந்த வார தொடக்கத்தில், ஜப்பான், தென் கொரியா, கனடா மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளுக்கு புதிய வரி அறிவிப்புகளையும், தாமிரத்திற்கு 50% வரியையும் டிரம்ப் வெளியிட்டார்.
27 நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பிற்காக அமெரிக்காவுடன் ஒரு விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட ஐரோப்பிய ஒன்றியம் நம்பியிருந்தது.
(Visited 1 times, 1 visits today)