சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற புதிய நடவடிக்கை – ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற இனி இராணுவ விமானம் பயன்படுத்தப்பட மாட்டாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்ப இராணுவத்துக்கு சொந்தமான சி 17 விமானங்கள் பயன்படுத்தப்பட்டது.
சட்டவிரோதமாக குடியேறினால், அதனை சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதை அவர்களுக்கு தெரிவிக்கும் வகையில், இராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
கடைசியாக சட்டவிரோதமாக குடியேறியவர்களை மார்ச் 1ம் திகதி ராணுவ விமானம் மூலம் அவர்களது நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பியது. இந்த நிலையில், சட்டவிரோதக் குடியேறிகளை இனிமேல் இராணுவ விமானத்தில் ஏற்றி அனுப்புவதில்லை என்று அமெரிக்க அரசு முடிவு செய்தது.
இராணுவ விமானத்தை பயன்படுத்துவதால் அரசுக்கு கூடுதல் செலவு ஆவதால் பயணிகள் விமானம் மூலம் அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து குவாத்தமாலாவுக்கு ராணுவ விமானத்தில் ஒருவரை அழைத்துச் செல்ல அதிக செலவு ஏற்படுவதாகவும், அதே நேரத்தில் அமெரிக்காவில் இருந்து பயணிகள் விமானம் மூலம் குவாத்தமாலா செல்ல ஒரு நபருக்கு மிக குறைந்த அளவிலேயே செலவிடப்படுகனிற்து.
பயணிகள் விமானத்தைவிட நபர் ஒருவருக்கு 5 மடங்கு அதிக செலவு ஆவதை தடுக்கவே ராணுவ விமானத்தை தவிர்க்க முடிவு செய்துள்ளது.