விமர்சனங்களுக்கு மத்தியில் மற்ற நாடுகள் மீதான வரிகளை அமுல்படுத்தும் திகதியை அறிவித்தார் ட்ரம்ப்!
அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின் போது, டொனால்ட் டிரம்ப் மற்ற நாடுகளுக்கு எதிராக வரிகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை மீண்டும் மீண்டும் எழுப்பினார்.
அமெரிக்க தயாரிப்புகளை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவதே இதன் நோக்கம் என அவர் கூறுகிறார். இருப்பினும் நிபுணர்கள் சிலர் வரிகள் அனைவருக்கும் விலைகளை உயர்த்துவதாக வாதிடுகின்றனர்.
இந்நிலையில் குறித்த வரிகளை நடைமுறைப்படுத்துவற்கான திகதியை அவர் அறிவித்துள்ளார். இதன்படி பிப்ரவரி 1 முதல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரியை விதிப்பது குறித்து தனது நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
“ஐரோப்பிய ஒன்றியம் எங்களுக்கு மிகவும் மோசமானது, எனவே அவர்கள் வரிகளுக்கு உள்ளாகப் போகிறார்கள். அதுதான் ஒரே வழி… நீங்கள் நியாயமாக இருக்கப் போகிறீர்கள்,” என்று அவர் கூறினார்.