மெக்சிகோ தக்காளிக்கு 17 சதவீதம் வரி : டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்து வருகிறார். இதில் அண்டை நாடான மெக்சிகோ மீதும் வரி விதிப்பு நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இந்த நிலையில் மெக்சிகோவுடனான தக்காளி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. மேலும் மெக்சிகோ தக்காளிக்கு 17 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், உள்ளூர் தக்காளி விவசாயிகளின் நலனுக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அமெரிக்க தக்காளி சந்தையில் சுமார் 70 சதவீதத்தை மெக்சிகோ வழங்குகிறது.
மெக்சிகோ மீதான வரி விதிப்பு அமெரிக்க தக்காளித் தொழிலை மீண்டும் கட்டியெழுப்பவும், அமெரிக்காவில் உண்ணப்படும் விளைபொருட்களும் அங்கு பயிரிடப்படுவதை உறுதி செய்யவும் உதவும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.