செய்தி வட அமெரிக்கா

தனது புதிய வரிகளால் சிரமங்களும் கூடுதல் செலவுகளும் ஏற்படும் – ஒப்புக்கொண்ட டிரம்ப்

தாம் அறிவித்த புதிய வரிகளால் சிரமங்களும் கூடுதல் செலவுகளும் ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

எனினும் அதன் மூலம் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் வெள்ளை மாளிகை சீன ஏற்றுமதிப் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட வரி 145 சதவீதம் என்பதைத் தெளிவுபடுத்தி உள்ளது.

பென்ட்டனைல் விவகாரத்தில் கூடுதலாக 20 சதவீதம் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு சீனாமீது விதிக்கப்பட்ட வரி 125 சதவீதம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் சீனாவுடன் புதிய ஒப்பந்தம் செய்துகொள்ளமுடியும் என டிரம்ப் கூறியிருக்கிறார்

அமெரிக்கா செயல்படுத்திய புதிய வரித் திட்டங்களுக்குப் பிறகு அவர் தமது முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்.

அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயாராய் இருப்பதாகச் சீனாவும் கூறியிருக்கிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!