வர்த்தக வரி அபாயங்களுக்கு மத்தியில் வியட்னாமில் பெருமுதலீடு செய்யும் டிரம்ப் நிர்வாகம்

ஹோட்டல்கள், குழிப்பந்துத் திடல்கள், அசையாச் சொத்துத் திட்டங்கள் எனப் பல்வேறு முதலீடுகளில் டிரம்ப் நிர்வாகமும் வியட்னாமிலுள்ள அதன் பங்காளி நிறுவனமும் தொடர்ந்து ஈடுபடுகின்றன.
வியட்னாம் மீது அமெரிக்கா வர்த்தக வரிகளை விதிக்கும் அபாயம் நிலவுகையில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் குடும்ப வர்த்தம், தன் திட்டப்படி செயல்படப் போவதாக அதன் வர்த்தகப் பேச்சாளர், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.
அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் வியட்னாமும் ஒன்று.கடந்த ஆண்டு தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து 30% மதிப்பிலான பொருள்களை அந்நாடு ஏற்றுமதி செய்துள்ளது.
வர்த்தக இடைவெளியைக் குறைத்து வரிகளைத் தவிர்க்க, அமெரிக்க ஏற்றுமதிகளை உள்நாட்டுக்குள் அதிகரிக்க வியட்னாம் உறுதிகூறியுள்ளது.அத்துடன், எலான் மஸ்கின் ‘ஸ்டார்லிங்க்’ நிறுவனம், தனது செயற்கைக்கோள் இணையச் சேவைகளை வழங்க வியட்னாம் அனுமதி அளித்துள்ளது.அதே நேரத்தில், அந்நிறுவனத்தின் உள்ளூர்க் கிளை நிறுவனத்தின்மீதான தன் உரிமையை வியட்னாம் தொடர்ந்து தக்கவைக்கும்.
“பல பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை மேற்கொள்ள டிரம்ப் அமைப்பு திட்டமிடுகிறது,” என்று பேச்சாளர் தெரிவித்தார்.இந்த முதலீட்டுத் திட்டங்களில் முதலாவது திட்டம், வரும் மே மாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. அடுத்த திட்டமும் இவ்வாண்டு அறிவிக்கப்படக்கூடும்.
முதல் திட்டப்பணியின் மதிப்பு, 1.5 பில்லியன் டாலர். வியட்னாமிய தலைநகர் ஹனோய்க்கு அருகே இந்த முதலீட்டுத் திட்டம் அமையவுள்ளது.இதற்கிடையே, வர்த்தகச் சமநிலையற்ற நாடுகள் மீதான வர்த்தக வரிகளைப் பதிலடியாக அமெரிக்கா, வரும் ஏப்ரல் 2ஆம் தேதி செயல்படுத்தவுள்ளது.
தலா 18 குழிகள் கொண்ட மூன்று குழிப்பந்துத் திடல்களும் குடியிருப்பு வளாகமும் கொண்டுள்ள இத்திட்டம், கிழக்கு ஆசியாவில் டிரம்ப் அமைப்புக்குச் சொந்தமான ஆகப் பெரிய முதலீட்டுத் திட்டமாகும்.முதல் இரண்டு குழிப்பந்துத் திடல்கள் 2027ஆம் ஆண்டு நடுவிற்குள் முழுமையாக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தோனீசியாவில் அமைந்துள்ள இரண்டு குழிப்பந்துத் திடல்களிலும் இதே வர்த்தகக் குழுமம் ஈடுபட்டுள்ளது