புதிய குடியேற்றக் கொள்கையை தயாரிக்கும் ட்ரம்ப் நிர்வாகம்!
அமெரிக்க நிர்வாகம் ஒரு புதிய குடியேற்றக் கொள்கையைத் தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த மாற்றம் பயணத் தடையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு கிரீன் கார்ட் மற்றும் பிற அந்தஸ்து சலுகைகளை கடுமையாகக் கட்டுப்படுத்தக்கூடும்.
கடந்த ஜூன் மாதம், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள 12 நாடுகள் மீதான பயணத் தடையில் ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
இதற்கமைய ஆப்கானிஸ்தான், சாட் (Chad), காங்கோ குடியரசு (Republic of Congo), ஈக்குவடோரியல் கினியா (Equatorial Guinea), எரிட்ரியா(Eritrea), ஹைட்டி (Haiti), ஈரான், லிபியா(Libya), மியான்மர்(Myanmar), சோமாலியா(Somalia), சூடான் (Sudan) மற்றும் ஏமன் (Yemen) ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்கு பயணிக்க முடியாது.
இந்நிலையில் புதிய அறிவிப்பின்படி, மேற்குறிப்பிட்ட பயணத் தடை பட்டியல் வருவதற்கு முன்பே, அந்நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே அமெரிக்காவில் இருந்தால், கிரீன் கார்டு அல்லது பிற ஒப்புதல்களைப் பெறுவது அவர்களுக்கு கடினமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி பயணத் தடைக்கு முன்னர் நாட்டிற்கு வந்தவர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் தங்குவதற்கும் வரவுள்ள மாற்றம் சவாலானதாக இருக்கும்” என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.





