உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையால் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு தலையிடி: போர்க்கப்பல் அனுப்ப சில நாடுகள் மறுப்பு!

ஹார்முஸ் Hormuz நீரிணைக்கு தமது நாடு போர்க்கப்பல்களை அனுப்பாது என்று ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து அமைச்சர் Catherine King திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் தமது எதிரி நாடுகளின் கப்பல்கள்மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து உலகளாவிய எரிபொருள் போக்குவரத்திற்கு மிக முக்கியமான இந்தப் பாதையைப் பாதுகாப்பளிக்க போர்க்கப்பல்களை அனுப்பி உதவுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump பல்வேறு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து அமைச்சர் Catherine King மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஆஸ்திரேலியர்களைப் பாதுகாக்க விமானப்படை உதவிகளை ஏற்கனவே வழங்கி வருவதால், மேலதிக இராணுவப் பங்களிப்பு தேவையில்லை என்று ஆஸ்திரேலிய அரசு கருதுகிறது.

மேலும், கப்பல்களை அனுப்புவது தொடர்பாக அமெரிக்காவிடமிருந்து தங்களுக்கு முறையான கோரிக்கைகள் எதுவும் வரவில்லை என ஆஸ்திரேலிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் சில நாடுகளும் போர்க்கப்பல்களை அனுப்புமாறு ட்ரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்துள்ளன.

அதேவேளை, ஈரான் மீது தாக்குதல்களை நடத்தினால், ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் ஓட்டம் தற்காலிகமாக தடைபடும் என்பது அமெரிக்காவிற்குத் தெரியும் என்று அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் Chris Wright முன்னதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!