வட அமெரிக்கா

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ட்ரம்ப் ; வெளியேற்றப்பட்ட ஜனாநாய கட்சி உறுப்பினர்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதன்கிழமை (மார்ச் 5) நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

அதிபர் டிரம்ப் உரையாற்றிக்கொண்டிருந்தபோது எழுந்து நின்று அவருக்கு எதிராகக் குரல் எழுப்பிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அல் கிரீன் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் அதிபர் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நிற்பது மரபல்ல.

அதிபர் டிரம்ப் உரையாற்றிக்கொண்டிருந்தபோது அவருக்கு எதிராகக் குரல் எழுப்பிய ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் கிரீனும் ஒருவர்.

எழுந்து நின்று எதிர்ப்புக் குரல் எழுப்பியதும் மட்டுமல்லாமல், அதிபர் டிரம்ப்பை நோக்கி தமது கைத்தடியை கிரீன் அசைத்தார்.

அதிபர் உரையாற்றிக்கொண்டிருப்பதாகவும் இருக்கையில் அமரும்படியும் கிரீனுக்கு அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் மைக் ஜான்சன் உத்தரவிட்டார்.ஆனால் கிரீன் அந்த உத்தரவைப் புறக்கணித்தார்.இதையடுத்து, கிரீன் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!