கனேடி தேர்தலுக்கு வரி விதிப்பை ட்ரூடோ பயன்படுத்துவதாக டிரம்ப் குற்றச்சாட்டு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவின் வரிவிதிப்பு பிரச்சினையை தேர்தலுக்கான உத்தியாக மாற்றி மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
வரிவிதிப்புக்கு காரணமே ட்ரூடோ தான் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். வரிவிதிப்பு பிரச்சினையை ட்ரூடோ தேர்தலுக்குப் பயன்படுத்துவதைப் பார்க்க வேடிக்கையாக இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
இதனிடையே கனடா பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத இறக்குமதி வரிவிதித்ததை எதிர்த்து கனடா பிரதமர் ட்ரூடோ டிரம்ப்புடன் சுமார் 50 நிமிடங்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து கனடாவின் எதிர்காலத்திற்காக அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் தொடங்கியிருப்பதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்
(Visited 3 times, 1 visits today)