பிரித்தானியாவின் புதிய அரசாங்கத்தின் கீழ் புலம்பெயர்வோருக்கு ஏற்படும் சிக்கல்!
பிரித்தானியாவின் புதிய பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்றுள்ள நிலையில் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது தொழிற்கட்சிக்கு இருக்கக்கூடிய பல சவால்களை நிபுணர்கள் பட்டியலிட்டு காட்டுகின்றனர்.
இதன்படி தொழிற்கட்சியின் முக்கிய சவாலாக இருப்பது புலம்பெயர் குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்துவது.
முன்னதாக ஸ்டாமர் கன்சர்வேட்டிவ் கட்சி முன்னெடுத்த ருவாண்டா திட்டத்தை கடுமையாக எதிர்த்திருந்தார்.
தன்னுடைய அரசாங்கத்தின் கீழ் ருவாண்டா திட்டம் அமுற்படுத்தப்படாது என அறிவித்திருந்தார். புலம்பெயர்வோரை கட்டுப்படுத்த முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அடுத்ததாக தொழிற்கட்சிக்கு இருக்கும் சவால்களில் மிக முக்கியமானது வைத்தியர்கள் பற்றாக்குறை மற்றும் NHS இல் நிலவும் குறைப்பாடுகளை தீர்ப்பது முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனைத் தொடர்ந்து குற்ற தடுப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது. குறிப்பாக போதைப் பொருள் கடத்தலை தடுப்பது என பல முக்கிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.