இலங்கை

திருகோணமலை: தாய் தந்தையரின் நினைவு நாளில் மகன் செய்த நெகிழ்ச்சியான செயல்

தாய் தந்தையரின் ஞாபகார்த்தமாக மூன்று ஏக்கர் வேளாண்மையை மாடுகளுக்கு உண்பதற்காக தானம் செய்த சம்பவமொன்று இன்று (10) பதிவாகியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஹதிவுல்வெவ பகுதியிலுள்ள கெமுனு திஸ்ஸ மற்றும் அவரது மனைவி தம்மிகா தமயந்தி என்ற தம்பதியினரே இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் வேளாண்மை செய்து பௌத்த துறவிகளுக்கும், விகாரைகளுக்கும் உதவி செய்கின்ற நிலையில் இம்முறை தமது பெற்றோர்களுக்காக தானம் செய்யும் நோக்கில் 3 ஏக்கர் வேளாண்மையை மாடுகளுக்கு உண்பதற்காக தானம் செய்துள்ளார்.

மஹதிவுல்வெவ-திம்பிரிவெவ ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமியின் ஆசிர்வாதத்துடன் சமய வழிபாட்டுடன் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது கிராம மக்களும் கலந்து கொண்டு சமய வழிபாட்டில் ஈடுபட்டதுடன் மாடுகளையும் வேளாண்மை உண்பதற்காக கொண்டு வந்துள்ளனர்,

 

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!