இலங்கை செய்தி

இலங்கையில் இடம்பெற்ற விமான விபத்து; காணொளி வெளியானது

திருகோணமலை சீனன்குடா விமானப்படை முகாம் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற பயிற்சி விமான விபத்து குறித்த காணொளி வெளியாகி உள்ளது.

இலக்கம் 01 பறக்கும் பயிற்சி பிரிவின் விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட PT 6 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

விமானம் விபத்துக்குள்ளானதுடன், அதில் பயணித்த இரண்டு அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

https://twitter.com/NewsWireLK/status/1688521151419695104

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!