இலங்கை

திருகோணமலை பிரச்சினை: நாமலின் நிலைப்பாடு அறிவிப்பு!

திருகோணமலை பிரச்சினையை இனவாத பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர். அரசாங்கம் உடனடியாக தலையிட்டு பேச்சு நடத்தி பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க வேண்டும்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று திருகோணமலை சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ திருகோணமலையில் விகாரை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. புத்தர் சிலையை பாதுகாப்புக்காகவே அது வெளியில் எடுக்கப்பட்டது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் பொலிஸாரின் தாக்குதலில் இரு பிக்குகள் காயம் அடைந்துள்ளனர்.

இது 1952 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு 2004 இல் புனித பூமியாக்கப்பட்டுள்ளது. கிழக்கில் பழமையான அறநெறி பாடசாலையும் இங்குள்ளது.

எனவே, அரசாங்கம் உடனடியாக தலையிட்டு பேச்சு நடத்த வேண்டும். இதனை இனவாத பிரச்சினையாக மாறுவதற்கு இடமளிக்ககூடாது. இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு நடத்தி தீர்வை வழங்க வேண்டும்.” என்றார் நாமல் ராஜபக்ச.

(Visited 2 times, 2 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!