திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – இனவாதமாக சித்தரிக்கும் முயற்சி
திருகோணமலையில் நிகழ்ந்த சம்பவத்தை இனவாத அல்லது மதவாத அசம்பாவிதமாகச் சித்தரித்துக் காட்டச் சில சக்திகள் முயல்வதாக பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
இது முற்றிலும் நீதிமன்ற விவகாரம் என்றும், இந்தச் சம்பவத்தில் அரசாங்கத்தின் தலையீடு கிடையாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
நீதிமன்றத்தின் சுதந்திரத்தை வலுவாகப் பாதுகாக்கும் அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் நேற்று முன்தினம் மாலை நிறுவப்பட்ட புத்தர் சிலை பெரும் பதற்றத்துக்கு மத்தியில், அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. குறித்த புத்தர்சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் உத்தரவிற்கமைய இந்த சிலை அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





