திருகோணமலை சலப்பையாறு: வீதி ஓரத்தில் வயோதிபப் பெண் சடலம்
திருகோணமலை -சலப்பையாறு பகுதியில் வீதி ஓரத்தில் வயோதிப பெண்ணொருவரின் இன்று (12) சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் குச்சவெளி சலப்பையாறு பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரி செல்வராஜா (56வயது) எனவும் தெரியவந்துள்ளது.
பக்கத்து வீட்டுக்கு சென்று வராத போது கணவர் தேடிச்சென்ற போது வீதியோரத்தில் குளிர் காரணமாக போத்திச் சென்ற பெட்சீட் வீதி ஓரத்தில் இருந்ததாகவும் சற்று தூரத்தில் அவர் வீசி எறியப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த இடத்தில் தடய பொருட்களாக கண்ணாடி துண்டுகள் காணப்பட்டதாகவும் விபத்து சம்பவம் இடம்பெற்றதை அடுத்து விபத்தில் சிக்குண்டவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
இருந்த போதிலும் விபத்து தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.





