திருகோணமலை மட்டக்களப்பு வீதி புனரமைப்பு பணிகள் தீவிரம்!!
திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதி இறால் குழி பகுதியை புனரமைக்கும் பணிகள் இன்று (03) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த சில நாட்களாக திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியினூடாக போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்த நிலையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அவர்களின் கண்காணிப்பின் கீழ் வேகமாக புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை குறித்த வீதியின் ஊடாக மோட்டார் சைக்கிள் முற்சக்கர வண்டிகள் பயணிக்கின்ற போதிலும் பஸ் போக்குவரத்துக்கள் இன்னும் இடம்பெறவில்லை.
அதேவேளை திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதி யான் ஓயா பாலத்துக்கு அருகில் உடைந்த நிலையில் காணப்பட்ட வீதி புனரமைப்பு பணிகள் நேற்று முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த வீதிகளின் ஊடாக நாளை முதல் பயணம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.




