தியாக தீபம் திலீபனுக்கு பிரித்தானியாவில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு
தமிழர் தாயகம் இன்று செப்டெம்பர் 26ஆம் நாள் தியாக தீபம் திலீபனின் நினைவுகளோடு நிமிர்ந்து நிற்கின்றது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் நல்லூரில் கொட்டும் மழையிலும் தீபம் திலீபனுக்கு தமிழ் மக்கள் வணக்கம் செலுத்தினர். அதேபோன்று வடக்கு, கிழக்கில் பல பகுதிகளில் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரித்தானியாவின் தலைநகரிலும் அரசியல், விழிப்புணர்வுப் போராட்டம் இன்று இடம்பெற்றது.
பிரித்தானியாவில் Downing Street, London, SW1A 2AA என்னும் முகவரியிலமைந்துள்ள பிரதமர் செயலகம் முன்பாகக் காலை 11 மணிக்குத் தேசியக் கொடிகள் ஏற்றுதலோடு தொடங்கப்பட்ட விழிப்புணர்வுப் போராட்டமானது மாலை 5 மணி வரை நடைபெற்றது.
தேசியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தியாக தீபத்திற்கான ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
இன்று மாலை 5 மணிக்கு அஞ்சலி நிகழ்வு நிறைவுற்றதுடன், வணக்கம் செலுத்தும் நிகழ்வில் தமிழ் மக்கள் பெருந்திரளாக திரண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், எழுச்சி உரைகளும் இடன்பெற்றன.