செய்தி விளையாட்டு

முத்தரப்பு T20 தொடர் – முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி

பாகிஸ்தான், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு T20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற 5வது போட்டியில் சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் மோதின.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற சிம்பாப்வே அணி துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.

அந்தவகையில், முதலில் களமிறங்கிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

சிம்பாப்வே அணி சார்பில் பிரையன் பென்னட்(Brian Bennett) 34 ஓட்டங்களும் சிக்கந்தர் ராசா(Sikandar Raza) மற்றும் ரியான் பர்ல்(Ryan Burl) 37 ஓட்டங்கள் பெற்றனர்.

இந்நிலையில், 174 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 16.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில், அதிரடியாக விளையாடிய பதும் நிசங்க(Pathum Nissanka) 98 ஓட்டங்களும் குசல் மெண்டிஸ்(Kusal Mendis) 25 ஓட்டங்களும் பெற்றனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!