முத்தரப்பு T20 தொடர் – 195 ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு T20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் சிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
அந்தவகையில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் சாஹிப்சடா பர்ஹான்(Sahibzada Farhan) 63 ஓட்டங்களும் பாபர் அசாம்(Babar Azam) 74 ஓட்டங்களும் பெற்றனர்.
சிம்பாப்வே அணி சார்பில் பந்து வீச்சில் சிக்கந்தர் ராசா(Sikandar Raza) 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
(Visited 2 times, 2 visits today)




