கொழும்பில் வீதிகளின் இருபுறமும் உள்ள மரங்களை வெட்ட முடியாது
கொழும்பில் வீதிகளின் இருபுறமும் உள்ள பல வருடங்கள் பழமையான மரங்களை முற்றாக வெட்ட முடியாது என கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
வீதியோரங்களில் உள்ள நாற்பது வருடங்களுக்கும் மேலான மரங்கள் ஆபத்தானவை என இனங்காணப்பட்டுள்ள போதிலும் அவை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாலை ஓரங்களில் உள்ள பாதுகாப்பற்ற மரங்களை வெட்டி சமன் செய்வதே தவிர, மரங்களை வெட்டி பாலைவனமாக்க வழியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அண்மையில் பேருந்து மீது மரம் விழுந்து 5 பேர் உயிரிழந்த சம்பவத்துடன், வீதியோரங்களில் அபாய நிலையில் உள்ள பாரிய மரங்களை உடனடியாக அகற்றுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.