பிரித்தானியாவில் 2 சகோதரிகளுக்கு கிடைத்த பொக்கிஷம் – எதிர்பாராத நேரத்தில் நடந்த சம்பவம்
பிரித்தானியாவில் இரண்டு சகோதரிகள் எதிர்பாராமல் கண்டுபிடித்த பொக்கிஷம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த 10 வயது Georgia மற்றும் 12 வயது Evie Hinton சாரணர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
இருவரும் தொல்லியல் பணிக்காகப் பூமியைத் தோண்டியபோது ஆடை அலங்கார ஊக்கைக் கண்டுபிடித்தனர். 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அது சுமார் 1,500 ஆண்டு பழைமையானது என்று கூறப்படுகிறது.
அது செம்பால் செய்யப்பட்டது. லண்டனில் உள்ள பிரித்தானிய அரும்பொருளகத்துக்கு வருமாறு சகோதரிகளுக்கு அழைப்புக் கிடைத்தது.
அங்குள்ள நிபுணர்களிடம் ஆடை அலங்கார ஊக்குக் காண்பிக்கப்பட்டது. அதன் பழைமைவாய்ந்த கலைப்பொருள்தான் என்பதைத் தொல்லியல் நிபுணர்கள் அங்கீகரித்தனர்.
ஹின்ட்டன் சகோதரிகள் அவர்களின் எதிர்பாராத கண்டுபிடிப்பை எண்ணிப் பூரித்தனர்.
(Visited 2 times, 1 visits today)