நைஜர் அதிபர் முகமது பாசும் மீது தேசத்துரோக வழக்கு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதிபர் முகமது பாசுமுக்கு எதிராக திரும்பிய ராணுவம் அவரை சிறைபிடித்தது. பின்னர் அவரை பதவி நீக்கம் செய்து ராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டதாக அவர்கள் அறிவித்தனர். இதற்கு ஐ.நா., ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு போன்றவை எதிர்ப்பு தெரிவித்தன.
இந்தநிலையில் முன்னாள் அதிபர் முகமது பாசும் மீது தேசத்துரோக வழக்கு மற்றும் தேசிய பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர போவதாக நைஜர் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதற்காக அவருக்கு எதிரான ஆதாரங்களை அவர்கள் திரட்டி வருகின்றனர். இந்த வழக்குகளில் முகமது பாசும் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் மரண தண்டனை வரை வழங்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
(Visited 10 times, 1 visits today)