அமெரிக்க பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை!

மறு அறிவிப்பு வரும் வரை ஈராக்கிற்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஈராக் பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் மற்றும் குடிமக்கள் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பல்வேறு முரண்பட்ட காரணங்களால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதம், கடத்தல்கள், ஆயுத மோதல்கள், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் அந்த சந்தர்ப்பங்களில் அமெரிக்க குடிமக்களுக்கு ஆதரவை வழங்குவதற்கு ஈராக் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே மோதல் தொடங்கியதில் இருந்து, ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.
மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஈராக் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை தனது குடிமக்களுக்கு மேலும் தெரிவித்துள்ளது.