பயண அட்டை – பாடசாலை மாணவர்களுக்கு விசேட சலுகை!
நாடளாவிய ரீதியில் நாளைய தினம் பாடசாலைகள் மீளவும் திறக்கப்படவுள்ளன.
இந்நிலையில் மாணவர்கள் கடந்த நவம்பர் மாதத்திற்கான பயண அட்டையை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய அறிவிப்பை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் பிரசன்ன குணசேன அறிவித்துள்ளார்.
இதேவேளை பேரிடரால் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளை மீட்டெடுக்க நிதி திரட்டும் நோக்கில் ஆசிரியர்கள் ஜனவரி மாதத்தில் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கத் தயாராக இருப்பதாக துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.




