கர்நாடக பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியராக நியமிக்கப்பட்ட திருநங்கை

கர்நாடகாவில் முதன் முறையாக ஒரு திருநங்கை, பல்லாரியின் ஸ்ரீ கிருஷ்ண தேவராய பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பாடம் நடத்தும் திறன், மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
விவசாயி மல்லையா, திப்பம்மா தம்பதியின் மகனான இவருக்கு மல்லேஷ் என பெயர் இருந்தது. பள்ளி நாட்களில் திருநங்கை என்பதை உணர்ந்த பின், ரேணுகாவாக பெயர் மாற்றம் செய்து கொண்டார். சொந்த ஊரில் உயர்நிலை பள்ளி படிப்பை முடித்தார்.
பல்லாரியின் மாநகராட்சி கல்லுாரியில் பி.யு.சி. முடித்து அரசு பட்டப்படிப்பு கல்லுாரியில் அட்மிஷன் பெற்றார். பல நெருக்கடிகள், சவால்களை கடந்து கன்னடத்தில் முதுகலை படிப்பை முடித்தார்.
தற்போது பல்லாரி பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியையாக நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் இந்த பதவிக்கு வந்த முதல் திருநங்கை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.