டிரம்பின் நடவடிக்கையால் இந்தியாவில் மூடப்பட்ட திருநங்கைகளுக்கான மருத்துவமனைகள்

சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) நிதியளித்ததைத் நிறுத்தியதை தொடர்ந்து, இந்தியாவில் திருநங்கைகளுக்கான முதல் மூன்று மருத்துவமனைகள் கடந்த மாதம் மூடப்பட்டன.
இதனால் கிட்டத்தட்ட 5,000 பேருக்கான சேவைகள் தடைபட்டன என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தில் நிதியளிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தனது “அமெரிக்கா முதலில்” கொள்கையுடன் ஒத்துப்போவதை உறுதி செய்வதற்காக, மறுஆய்வு செய்யப்படும் வரை, ஜனவரி மாதம் அனைத்து வெளிநாட்டு உதவிகளையும் 90 நாட்கள் நிறுத்தி வைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.
நிதி முடக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட முக்கிய இழப்புகளில் இந்தியாவில் உள்ள மூன்று Mitr மருத்துவமனைகள் அடங்கும், அவை பெரும்பாலும் திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், ஆலோசகர்கள் மற்றும் பிற தொழிலாளர்களால் நடத்தப்படுகின்றன.