கிரிமியா தலைநகர் பகுதில் ரயில் சேவைகள் நிறுத்தம
கிரிமியாவில் இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதை அடுத்து ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
கிரிமியாவின் தலைநகரான சிம்ஃபெரோபோல் மற்றும் செவஸ்டோபோல் நகருக்கு இடையேயான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பிராந்தியத்தின் ரஷ்ய தலைவர் கூறினார்.
இதேவேளை இந்த வெடிப்பு சம்பவத்தில், தானியங்கள் ஏற்றப்பட்ட சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாகவும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிமியா 2014 இல் ரஷ்யாவால் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்டது. உக்ரைன் அதை திரும்பப் பெற போராடுவதாகக் கூறியது, இருப்பினும் இது மிகவும் கடினமாக இருக்கும் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
(Visited 9 times, 1 visits today)