வங்கதேசம் முழுவதும் ரயில் சேவைகள் இரத்து – வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ரயில் ஊழியர்கள்!

வங்கதேசம் முழுவதும் ரயில் சேவைகள் இன்று (28.01) இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் கோரி ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமையால் மேற்படி ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நோபல் அமைதி பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்துடன் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்படாததை அடுத்து வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக வங்கதேச ரயில்வே ஓட்டுநர் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் தற்காலிகத் தலைவர் சைதுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அரசாங்கம் தங்கள் கோரிக்கைகளை ஏற்கவில்லை என்றால் வேலைநிறுத்தம் காலவரையின்றி தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.
(Visited 32 times, 1 visits today)