செர்பியாவில் ரயில் கூரை இடிந்து விழுந்த சம்பவம் : அமைச்சர் உள்பட 11 பேர் கைது!
செர்பியாவில் இந்த மாத தொடக்கத்தில் வடக்கு நகரமான நோவி சாடில் உள்ள ரயில் நிலையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்படாத சந்தேக நபர்கள், பொது பாதுகாப்புக்கு எதிரான குற்றச் செயல்களைச் செய்தல், பொது ஆபத்தை ஏற்படுத்துதல் மற்றும் ஒழுங்கற்ற கட்டுமானப் பணிகளைச் செய்த குற்றச்சாட்டை எதிர்கொள்வதாக அந்நாட்டின் வழக்குறைஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த விபத்தை தொடர்ந்து கட்டுமான அமைச்சர் கோரன் வெசிக் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சோகத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று கோரி போராட்ட அலை வெடித்ததை அடுத்து கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.