ரயில்-யானை மோதல்கள்: இலங்கையில் AIப் பயன்படுத்தி தீர்வு

இலங்கையில் புகையிரதமும் யானையும் மோதுவதைத் தடுப்பதற்காக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினால் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய சாதனத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சக அறிக்கையின்படி, புதிய சாதனங்கள் மார்ச் முதல் இரண்டு வாரங்களில் ஒரு முன்னோடி திட்டமாக நிறுவப்படும்.
காட்டு யானை சுமார் 500 மீற்றர் தூரத்தில் புகையிரதப் பாதையில் சென்றாலும் புகையிரத சாரதிக்கு அறிவிக்கும் திறன் இந்த கருவியுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இக்கருவியில் தொழில்நுட்ப மதிப்பீடுகள் நடத்தப்பட உள்ளன, மூன்று மாத முறையான ஆய்வுக்குப் பிறகு, வனவிலங்கு வழித்தடங்களைக் கடக்கும் ரயில்வே வழித்தடங்களில் இது நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக, இரவு நேர ரயில்களில் யானைகள் மோதுவதைத் தடுப்பதற்காக, கூடுதல் வேக வரம்புகளை அமுல்படுத்துவது மற்றும் ரயில் கால அட்டவணையை திருத்துவது குறித்து இலங்கை ரயில்வே திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.