நோர்வேயில் தடம் புரண்ட ரயில் : ஒருவர் பலி!
நோர்வேயின் வடக்கு கடற்கரையில் 55 பேருடன் ஓடும் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.
ஆர்க்டிக் சர்க்கிள் எக்ஸ்பிரஸ் ட்ரான்ட்ஹெய்மிலிருந்து ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே உள்ள தொலைதூர வடக்கு நகரமான போடோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த 4 பேரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலை தெளிவாக தெரியவில்லை.
ஒரு இன்ஜின் மற்றும் ஐந்து பெட்டிகளைக் கொண்ட ரயில் தடம் புரண்டதற்கு ஒரு பாறை சரிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





