இந்தியாவில் தடம் புரண்ட ரயில் : இருவர் உயிரிழப்பு, பலர் படுகாயம்!

வட இந்தியாவில் பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டதில் குறைந்தது இரண்டு பயணிகள் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு நகரமான சண்டிகரில் இருந்து வடகிழக்கு அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார் நகருக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது கோண்டா நகருக்கு அருகே தடம் புரண்டதில் இந்த விபத்து நிகழ்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
(Visited 14 times, 1 visits today)