ஐரோப்பா

செக்கு குடியரசில் டிரக்குடன் மோதி விபத்திற்குள்ளான ரயில் : ஒருவர் பலி, பலர் காயம்!

கிழக்கு செக் குடியரசில் ரயில் ஒன்று டிரக் ஒன்றுடன் இன்று (24.01) மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலின் ஓட்டுநர் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏதுமின்றி அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் செக் ரயில்வே தெரிவித்துள்ளது.

விபத்தின் போது ரயிலில் 60 பேர் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். நாட்டின் தலைநகரான ப்ராக் நோக்கிச் சென்ற வேகமான ரயில், போஹுமின் நகருக்கு அருகில் உள்ள கடவையில் டிரக் மீது மோதியதில், விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்