இலங்கையில் கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பரிதாபமாக பலி

குளியாபிட்டிய – கம்புராபொல பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
புஜ்கமுவ ஓயாவில் ஜீப் ரக வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குருநாகல் – கொபெய்கனே பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடைய இருவரே இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர் அவர்கள் மீண்டும் வீடு திரும்பிய போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)