புத்தாண்டு தினத்தில் சோகம் – மாவனெல்லவில் 03 பேர் படுகொலை!
மாவனெல்ல பொலிஸ் பிரிவின் கொண்டேனிய பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட நான்கு பேர் ஆரம்பத்தில் மாவனெல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்கள் 52, 57 மற்றும் 66 வயதுடைய கொண்டேனிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தாக்குதலின் போது காயமடைந்த 35 வயதுடைய பெண் ஒருவர் தற்போது மாவனெல்ல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக கொண்டேனிய பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் மனநிலை சரியில்லாதவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலங்கள் மாவனெல்ல மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மாவனெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





