இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் சோற்றுப் பார்சலில் மட்டத்தேள் – உணவகத்திற்கு சீல்!

கடந்த வெள்ளிக்கிழமை திருநெல்வேலி பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் மதிய உணவு வாங்கிய ஒருவரின் சோற்று பார்சலில் மட்டைத்தேள் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனிற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்தது.

இதனையடுத்து சனிக்கிழமை குறித்த உணவகம் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் இனால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் ஏற்கனவே வழங்கப்பட்ட திருத்த வேலைகள் எவையும் நிவர்த்தி செய்யப்படாமல் இருப்பது அவதானிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (27) கடை உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான், உரிமையாளரிற்கு 45,000 ரூபா தண்டம் அறவிட்டதுடன் கடையினை திருத்த வேலைகள் முடிவடையும் வரை சீல்வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளை வழங்கினார்.

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் குறித்த உணவகம் இன்றைய தினம் சீல் வைத்து மூடப்பட்டது.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை