இலங்கை

யாழில் சிறுமிக்கு நேர்ந்த துயரம்

யாழில் பாதுகாப்பற்ற வீட்டு கிணற்றில் விழுந்த சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மிருசுவில் வடக்கு, மிருசுவிலைச் சேர்ந்த சசிகரன் கிங்சிகா என்ற 6 வயது சிறுமியாவார்.

மிருசுவில் வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று வரும் மேற்படி மாணவி வீட்டிலிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் நேற்று முன்தினம் மாலை விழுந்துள்ளார்.

சிறுமியை காணாத நிலையில் தேடிய போது கிணற்றில் சிறுமி விழுந்தமை தெரிய வந்துள்ளது.

உடனடியாக மீட்கப்பட்டு கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.

(Visited 51 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்